1. 1-to-1 கன்சல்டிங் (1-to-1 Consultation):
முன்பதிவு செய்யப்பட்ட கன்சல்டிங் நேரத்தை மாற்றியமைக்க (Reschedule) விரும்பினால், குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே எங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு (+91-97888-56788) தகவல் தெரிவிக்க வேண்டும்.
முன்பதிவு செய்த நேரத்தில் வாடிக்கையாளர் அழைப்பை ஏற்காவிட்டாலோ அல்லது கலந்துகொள்ளத் தவறினாலோ (No-show), செலுத்திய கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் திரும்ப வழங்கப்பட மாட்டாது (No Refund).
எங்களால் தவிர்க்க முடியாத காரணங்களால் கன்சல்டிங் ரத்து செய்யப்பட்டால், முழுத் தொகையும் 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் (Working days) வாடிக்கையாளரின் கணக்கிற்குத் திரும்பப் செலுத்தப்படும்.
2. ஆன்லைன் வகுப்புகள் (Online Classes):
ஆன்லைன் வகுப்பிற்கான கட்டணம் செலுத்தி, வகுப்பிற்கான லிங்க் (Class Link) அல்லது அக்சஸ் (Access) வழங்கப்பட்ட பிறகு, கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
வாடிக்கையாளர் சொந்த காரணங்களுக்காக வகுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றால் அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது.
3. தொழில்நுட்பக் கோளாறு (Technical Issues): வாடிக்கையாளரின் இன்டர்நெட் பிரச்சனையால் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனால் ரீஃபண்ட் கிடையாது. எங்கள் தரப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் செஷன் வேறு தேதிக்கு மாற்றப்படும் அல்லது முழுத் தொகையும் ரீஃபண்ட் செய்யப்படும்.
பகுதித் தொகை (Partial Refund): நீண்ட கால வகுப்புகளில் (உதாரணமாக 30 நாள் கிளாஸ்) பாதியில் விலக நினைத்தால், மீதமுள்ள நாட்களுக்கான கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.